

பங்குச் சந்தைகள் 2-வது நாளாக இன்றும்(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,745.05 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 328.48 புள்ளிகள் அதிகரித்து 85,939.06 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 67.95 புள்ளிகள் உயர்ந்து 26,273.25 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
சென்செக்ஸ் முதல்முறையாக 86,000 புள்ளிகளைக் கடந்தும் நிஃப்டி 14 மாதங்களுக்குப் பிறகு புதிய உச்சத்தையும் எட்டி சாதனை படைத்துள்ளது.
நிஃப்டி அதிகபட்சமாக கடந்த 2024 செப். 27 அன்று 26,277.35 புள்ளிகளை எட்டியிருந்தது. இன்று காலை 26,306.95 என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
அமெரிக்க பெடரல் வட்டி விகித குறைப்பு, இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை, வெளிநாட்டு முதலீடு ஆகியவற்றால் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்செக்ஸ் நிறுவனங்களில் பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஐசிஐசிஐ வங்கி, லார்சன் & டூப்ரோ, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களில் அடங்கும்.
எடர்னல், கோடக் மஹிந்திரா வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட், மாருதி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.