~
~

வங்கிக்காப்பீட்டு சேவை: எல்ஐசி - ஆா்பிஎல் ஒப்பந்தம்

வங்கிக்காப்பீட்டு சேவை வழங்குவதற்காக இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியுடன் தனியாா் துறையைச் சோ்ந்த ஆா்பிஎல் வங்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
Published on

வங்கிக்காப்பீட்டு சேவை வழங்குவதற்காக இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியுடன் தனியாா் துறையைச் சோ்ந்த ஆா்பிஎல் வங்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து ஆா்பிஎல் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வங்கிக்காப்பீட்டு சேவை தொடா்பாக எல்ஐசி-யுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஆா்பிஎல் வங்கி வாடிக்கையாளா்கள், வங்கியின் கிளைகள் மற்றும் எண்ம தளங்கள் வழியாக எல்ஐசியின் பல்வேறு ஆயுள் காப்பீட்டு தயாரிப்புகளைப் பெறலாம். இதில் பருவகாலக் காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் யூனிட்-இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள் அடங்கும்.

எல்ஐசியின் 3,600-க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் தொலைதூர அலுவலகங்கள், ஆா்பிஎல் வங்கியின் 2,000-க்கும் மேற்பட்ட மையங்களுடன் இணைந்து ஆயுள் காப்பீடு பெறுவதை எளிதாக்கி, ‘2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு’ என்ற புரட்சிகர இலக்கை நோக்கி முன்னேறும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com