
புதுதில்லி: சில்லறை விற்பனைச் சங்கிலியான டி-மார்ட் தனது அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் ஸ்டோர்ஸ் மூலம் செப்டம்பர் 30, 2025 உடன் முடிவடைந்த 2-வது காலாண்டில் அதன் செயல்பாடுகளிலிருந்து வந்த வருவாய் 15.43% உயர்ந்து ரூ.16,218.79 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுவே கடந்த வருடம் அதன் செயல்பாடுகளிலிருந்து வந்த வருவாய் ரூ.14,050.32 கோடியாக இருந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே வேளையில் செப்டம்பர் 2025 நிலவரப்படி அதன் மொத்த கடைகளின் எண்ணிக்கை 432 ஆக இருந்ததாக தெரிவித்துள்ளது.
காலாண்டுக்கு காலாண்டு அடிப்படையில், டி-மார்ட்டின் வருவாய் 1.8 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.15,932.12 ஆக இருந்தது. அதுவே 2022-23 நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில், அவென்யூ சூப்பர்மார்ட்ஸின் வருவாய் ரூ.12,307.72 கோடியாக இருந்தது.
செப்டம்பர் 30, 2025 உடன் முடிவடைந்த காலாண்டு மற்றும் அரை ஆண்டுக்கான நிறுவனத்தின் முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த நிதி முடிவுகளை பரிசீலித்து அங்கீகரிக்க, நிறுவனத்தின் வாரியம் அக்டோபர் 11ஆம் தேதி கூட உள்ளதாக தெரிவித்தது.
ராதாகிஷன் தமானி மற்றும் அவரது குடும்பத்தினரால் நடத்தப்படும் டிமார்ட், மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, சத்தீஸ்கர், என்சிஆர், தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.