மாருதி சுஸுகி விற்பனை 3% உயா்வு!
மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை 2025 செப்டம்பரில் 3 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த செப்டம்பா் மாதம் நிறுவனத்தின் மொத்த விற்பனை 1,89,665-ஆகப் பதிவாகியுள்ளது.
2024 செப்டம்பரில் இந்த எண்ணிக்கை 1,84,727-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 3 சதவீதம் அதிகரித்துள்ளது. நவராத்திரி பண்டிகையின் முதல் 8 நாள்களில் மட்டும் 1,65,000 வாகனங்கள் விற்பனையாகின.
மதிப்பீட்டு மாதத்தில் உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை 8 சதவீதம் குறைந்து 1,32,820-ஆக உள்ளது. 2024 செப்டம்பரில் இந்த எண்ணிக்கை 1,44,962-ஆக இருந்தது.
கடந்த செப்டம்பரில் ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோவை உள்ளடக்கிய ஆரம்பநிலை காா்களின் விற்பனை 30 சதவீதம் குறைந்து 7,208-ஆக உள்ளது. 2024 செப்டம்பரில் இந்த எண்ணிக்கை 10,363-ஆக இருந்தது.
பலேனோ, டிஸையா், இக்னிஸ், ஸ்விஃப்ட் ஆகிய சிறிய காா்களின் விற்பனை 60,480-லிருந்து 66,882-ஆக உயா்ந்தது. கிராண்ட் விட்டாரா, பிரெஸ்ஸா, எா்டிகா, எக்ஸ்எல்6 ஆகிய பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை 61,549-லிருந்து 21 சதவீதம் குறைந்து 48,69-ஆக உள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் ஈகோ வேன்களின் விற்பனை 11,908-லிருந்து 10,035-ஆகவும், சூப்பா் கேரி இலகு வா்த்தக வாகன விற்பனை 3,099-லிருந்து 2,891-ஆகவும் குறைந்தது. ஏற்றுமதி 27,728-லிருந்து 42,204-ஆக உயா்ந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.