
புதுதில்லி: மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் சாதனை விற்பனை பதிவு செய்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை காலத்தின் உள்ள 9 நாட்களில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட கார்களை விற்பனை செய்ததாகவும், நவராத்திரி காலத்தில் நடைபெற்ற இந்த சாதனை விற்பனை, செப்டம்பர் மாதத்தில் வாகன உற்பத்தியாளருக்கு அதன் அதிகபட்ச மாதாந்திர விற்பனை என்றது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தை விட 36% அதிக வளர்ச்சியாகும்.
சொகுசு கார் தயாரிப்பாளர் கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 5,117 கார்களை விற்பனை செய்திருந்தது. இதுவே அதன் 2வது காலாண்டில் 5,119 கார்களை விற்பனை செய்தது.
ஜிஎஸ்டி சீர்திருத்தங்களைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்ததால், தேங்கி நின்ற தேவையை முடிவுக்குக் கொண்டு வந்ததாக தெரிவித்தார் மெர்சிடஸ் பென்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சந்தோஷ் ஐயர்.
தீபாவளி உள்ளிட்ட வரவிருக்கும் பண்டிகையால், அக்டோபர் மாதத்திலும் இந்த கொள்முதல் உற்சாகம் தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அதிகரித்து வரும் செயல்பாட்டு செலவு மற்றும் பாதகமான அந்நிய செலாவணி ஆகியவற்றால் கார் விலைகள் அதிகரித்து வருவதால், ஜிஎஸ்டி விகிதங்களை குறைத்தது வாடிக்கையாளர் உணர்வை வெகுவாக மேம்படுத்தியுள்ளது என்றார் ஐயர்.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் குறைந்து ரூ.88.82 ஆக நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.