
மும்பை: தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதித்துறை பங்குகளின் முன்னேற்றத்தால், இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது வர்த்தக தினமாக திங்கள்கிழமை உயர்ந்தன. சென்செக்ஸ் 583 புள்ளிகள் உயர்ந்து, நிஃப்டி 25,000 என்ற அளவை மீண்டும் பெற்றது.
30-பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 582.95 புள்ளிகள் (0.72 சதவீதம்) உயர்ந்து 81,790.12-இல் நிறைவடைந்தது.
சென்செக்ஸ் பட்டியலில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டெக் மஹிந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், இன்டர்னல், இன்ஃபோசிஸ், கோட்டக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்டவை உயர்வைக் கண்டன. எனினும், டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், பவர் கிரிட் மற்றும் டைட்டன் ஆகியவை சரிவைக் கண்டன.
50-பங்குகள் கொண்ட தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 183.40 புள்ளிகள் (0.74 சதவீதம்) உயர்ந்து 25,077.65-இல் நிறைவடைந்தது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 1,583.37 கோடி டாலர் மதிப்பிலான பங்குகளை விற்றன என்று பங்குவர்த்தக தரவுகள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.