
'தி சென்னை சில்க்ஸ்' நிறுவனம் புத்தம்புது பொலிவுடன் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், இதுபற்றிச் செய்யறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு புதிய விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொடக்கத்திலிருந்தே புதுவிதமான விளம்பரங்களை எடுத்து தங்கள் படைப்புகளைப் பிரபலப்படுத்தி வரும் தமிழகத்தின் மாபெரும் ஜவுளி சாம்ராஜ்யமான 'தி சென்னை சில்க்ஸ்' நிறுவனம் இப்பொழுது புத்தம்புது பொலிவுடன் விரிவுபடுத்தப்பட்டு மிக பிரமாண்டமான தோற்றத்துடன் வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல மாற்றங்களைச் செய்து புதுப்பிக்கப்பட்டு உலகத் தரத்தில் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் புதுமையாக வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றார்போல முழுமையாக செய்யறிவால் (ஏஐ) உருவாக்கப்பட்ட விளம்பரத்தை உருவாக்கியுள்ளது. இந்த விளம்பரமானது சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணால் 40 தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு 7 நாள்களில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஹாலிவுட் தரத்தில் கற்பனைத் திறனை வெளிப்படுத்தும் செய்யறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தமிழ்ப் பெண் ஒருவரால் உருவாக்கப்பட்ட இந்த விளம்பரத்தை பலரும் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.
இந்த புதிய முயற்சியானது இளைஞர்களுக்கும், விளம்பரத் துறைக்கும் ஒரு பெரிய மாற்றமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விளம்பரத்தினை குறுகிய காலத்தில் உருவாக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக உள்ளது.
ஆரம்ப நிலையில் இருக்கக் கூடிய ஏஐ தொழில்நுட்பத்தை துல்லியமாக கையாண்டு அதிக தரத்திலான விளம்பரத்தினை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தை தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் மற்றும் தி சென்னை சில்க்ஸ் இணையதளத்திலும் பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.