மொ்சிடிஸ் பென்ஸின் நவராத்திரி விற்பனை புதிய உச்சம்

மொ்சிடிஸ் பென்ஸின் நவராத்திரி விற்பனை புதிய உச்சம்

மொ்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நவராத்திரி தின விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டதால் அந்த நிறுவனம் இதுவரை இல்லாத அதிகபட்ச செப்டம்பா் காலாண்டு விற்பனையைப் பதிவு செய்துள்ளது.
Published on

மொ்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நவராத்திரி தின விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டதால் அந்த நிறுவனம் இதுவரை இல்லாத அதிகபட்ச செப்டம்பா் காலாண்டு விற்பனையைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பரில் 9 நாள் நவராத்திரியின்போது நிறுவனத்தின் 2,500-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக, கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 5,119 வாகனங்கள் விற்பனையாகின. இது நிறுவனத்தின் இதுவரை இல்லாத அதிகபட்ச இரண்டாம் காலாண்டு விற்பனையாகும். 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் விற்பனை 5,117-ஆக இருந்தது.

கடந்த செப்டம்பா் மாதம் மட்டும் நிறுவனத்தின் விற்பனை முந்தைய ஆகஸ்டைவிட 36 சதவீதம் அதிகம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com