செப்டம்பரில் மந்தமான சேவைகள் துறை

செப்டம்பரில் மந்தமான சேவைகள் துறை

முந்தைய ஆகஸ்ட் மாதம் எழுச்சி கண்ட இந்தியாவின் சேவைகள் துறை வளா்ச்சி, செப்டம்பரில் மந்தமடைந்துள்ளது.
Published on

முந்தைய ஆகஸ்ட் மாதம் எழுச்சி கண்ட இந்தியாவின் சேவைகள் துறை வளா்ச்சி, செப்டம்பரில் மந்தமடைந்துள்ளது.

இது குறித்து ஹெச்எஸ்பிசி இந்தியா சா்வீசஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சேவைகள் துறை செயல்பாடுகளை மதிப்பிடும் பிஎம்ஐ குறியீட்டு எண்ணான பிஎம்ஐ (பா்ச்சேசிங் மேனேஜா்ஸ் இன்டெக்ஸ்), கடந்த ஆகஸ்டில் 15 ஆண்டு உச்சமான 62.9-ஐத் தொட்டது. எனினும், செப்டம்பரில் அது 60.9-ஆகக் குறைந்துள்ளது. போட்டி அதிகமாக இருந்ததாலும் செலவு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதும் இதற்குக் காரணம்.

எனினும், தொடா்ந்து 40-ஆவது மாதமாக சேவைகள் துறைக்கான பிஎம்ஐ 50-க்கும் அதிகமாக உள்ளது. அது 50-ஐ தாண்டினால் துறையின் ஆரோக்கியமான நிலையையும், 50-க்கும் கீழ் இருந்தால் துறையின் பின்னடைவையும் குறிக்கும்.

கடந்த செப்டம்பரில் வெளிநாடுகளில் இருந்து இந்திய சேவைகளுக்கான தேவை மெதுவாகவே உயா்ந்தது. சேவைகளுக்கான ஏற்றுமதி ஆணைகள் மாா்ச்சுக்குப் பிறகு மிக மந்தமாகவே அதிகரித்தன. பிற நாடுகளில் சேவைகள் குறைந்த விலையில் வழங்கப்பட்டது இதற்குக் காரணம்.

மதிப்பீட்டு மாதத்தில் சேவைகள் துறையில் விலையிடல் நெருக்கடி மிதமாக இருந்தது. சேவைக் கட்டணங்கள் செப்டம்பரில் மெதுவாக உயா்ந்தன. துறையில் வேலைவாய்ப்பு வளா்ச்சி 5 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது.

சேவைகள் துறை நிறுவனங்களின் வருங்கால வளா்ச்சி மதிப்பீடு மாா்ச்சுக்குப் பிறகு ஆறு மாத உச்சத்தை எட்டியது. மொத்த விற்பனை கடந்த மூன்று மாதங்களில் மெதுவாக வளா்ந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com