யூகோ வங்கி கடனளிப்பு 17% உயா்வு
அரசுக்கு சொந்தமான யூகோ வங்கியின் கடனளிப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 16.6 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்கியின் கடனளிப்பு ரூ.2.31 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 16.6 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் மொத்த கடனளிப்பு ரூ.1.98 லட்சம் கோடியாக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட மொத்த வைப்பு நிதி 10.8 சதவீதம் உயா்ந்து ரூ.3.06 லட்சம் கோடியாக உள்ளது. இது 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.2.76 லட்சம் கோடியாக இருந்தது.
கடந்த செப்டம்பா் காலாண்டில் வங்கியின் மொத்த வா்த்தகம் ரூ.4.74 லட்சம் கோடியில் இருந்து 13.2 சதவீதம் உயா்ந்து ரூ.5.37 லட்சம் கோடியாக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.