
ஆடம்பரமான பொருள்களுக்கு செலவழிப்பதைக் காட்டிலும், முதலீடுகள் நற்பயனைத் தரும் என்று பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
சமீபகாலமாக புதுப்புது மொபைல் போன்களை வாங்குவதில் இளம் தலைமுறையினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும், ஐபோன் வாங்குவதற்கு போட்டி போட்டுக்கொண்டு வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர்.
ஐபோன் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு மாடல் ஐபோனையும் தான் தவறாமல் வாங்குவதாக பயனர் ஒருவர் பெருமிதமாகக் கூறுகிறார். மொபைல் மட்டுமின்றி, டிரெண்டிங்கில் உள்ள ஆடம்பர பொருள்கள் மீது இளம் தலைமுறையினர் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
ஆனால், இவ்வாறு ஆடம்பரமான பொருள்களுக்கு செலவழிப்பதைவிட முதலீட்டில் பணத்தை செலவழிப்பது பயனுள்ளதாக இருக்கும் பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
உதாரணமாக, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மொபைல் போனின் விலை - ரூ. 1.50 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். அதனை வாங்க விரும்பும் மிடில் கிளாஸ் பிரிவினர், இஎம்ஐ-யில்தான் (EMI) வாங்குவர்.
மாதம் ரூ. 4,200 என்று 36 மாதங்களுக்கு (3 ஆண்டுகள்) அவர் இஎம்ஐ கட்ட வேண்டியிருக்கும். இந்த 3 ஆண்டுகளுக்குள்ளாகவே அவர் வாங்கிய மொபைல் போன் மீதான ஈர்ப்பு மங்கிவிடும்.
ஆனால், அதே 36 மாதங்களுக்கு அதே ரூ. 4,200-ஐ எஸ்ஐபி-யில் (SIP) முதலீடு செய்தால், 3 ஆண்டுகளில் ரூ. 29,733 அதிகரிக்கும்.
அதே சமயம், நாம் வாங்கும் மொபைல் போன்ற டெக் பொருள்கள் நாட்கள் செல்லச்செல்ல அதன் மதிப்பை இழக்கும். கேஜட்டுகள் குறுகிய கால திருப்தியை மட்டுமே வழங்கும். ஆனால், முதலீடுகள் நீண்டகால மதிப்பை வழங்குகின்றன.
எந்தவொரு முதலீட்டு முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பு சான்றளிக்கப்பட்ட நிபுணர்களுடன் சரிபார்க்குமாறு பொருளாதாரவியலாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.