
மும்பை: உள்நாட்டில் பங்குச் சந்தைகள் உச்சம் தொட்ட நிலையில், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட தொய்வு காரணமாக இன்றயை அந்நிய செலவானி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.88.69 ஆக நிறைவடைந்தது.
உள்நாட்டு சந்தைகளில் ஏற்பட்ட வலிமை மற்றும் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட பரவலான சரிவு காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். அதே வேளையில், மத்திய வங்கியின் தலையீடும் இந்திய ரூபாய்க்கு ஆதரவளித்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பு ரூ.88.80ஆக தொடங்கி ரூ.88.50 முதல் ரூ.88.80 என்ற வரம்பில் வர்த்தகமானது. பிறகு முந்தைய முடிவை விட 10 காசாகள் உயர்ந்து ரூ.88.69 காசுகளாக முடிவடைந்தது.
நேற்று (வியாழக்கிழமை) டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.88.79 ஆக நிறைவடைந்தது.
இதையும் படிக்க: பார்மா, வங்கிப் பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.