மும்பை: பண்டிகை நாள்களையொட்டி பங்குச் சந்தை விடுமுறை நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விரைவில் பண்டிகை காலம் தொடங்க உள்ளதால், வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் வரவிருக்கும் விடுமுறைக்கான நாட்களை எதிர்நோக்கியுள்ளனர்.
தீபாவளி நெருங்கி வருவதால், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆனது அக்டோபர் மாதம் 2025 க்கான அதிகாரப்பூர்வ விடுமுறை அட்டவணையை வெளியிட்டுள்ளது.
தந்தேராஸ் நாளில் விடுமுறை
தீபாவளி கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கும் தந்தேராஸ் பண்டிகை அக்டோபர் 18 (சனிக்கிழமை) அன்று கொண்டாடப்படும்.
அக்டோபர் 18 மற்றும் 19 ஆகிய இரண்டு நாட்களும் வாராந்திர விடுமுறை என்பதால், பங்குச் சந்தைகள் இரண்டு நாட்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மறுநாள் திங்கள்கிழைமை அன்று வழக்கம் போல் மீண்டும் வர்த்தகம் நடைபெறும்.
லட்சுமி பூஜை செவ்வாய்க்கிழமை அக்டோபர் 21, 2025 அன்று வருகிறது. அன்றைய தினம் பங்குச் சந்தைகள் விடுமுறை அளிக்கப்படும். இருப்பினும், பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ-யில் பங்குச் சந்தைகள் முஹுரத் வர்த்தகத்தை முன்னிட்டு ஒரு மணி நேர சிறப்பு வர்த்தக அமர்வு பிற்பகல் 1.30 முதல் 2.45 வரை நடைபெறும். மறுநாள் அக்டோபர் 22, அதாவது தீபாவளி பண்டிகை முடிந்த இரண்டாம் நாள், வடமாநில வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கும் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதனால், அன்றும் பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு சுப ஆரம்பம்
முஹுரத் அமர்வானது இந்து மதத்தில் விக்ரம் சம்வத் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும். இந்த நாளில், ஒரு மணி நேர அமர்வு மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் முதலீடு செய்வது, வரவிருக்கும் ஆண்டிற்கான செழிப்பையும், வெற்றியையும் அள்ளி தரும் என்பது நம்பிக்கை.
2025ஆம் ஆண்டின் விடுமுறை நாட்கள்
ஸ்ரீ குருநானக் ஜெயந்தி முன்னிட்டு நவம்பர் 5ஆம் அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த விடுமுறையானது கிறிஸ்துமஸ்ஸை முன்னிட்டு டிசம்பர் 25, 2025 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் விடுமுறை அட்டவணை
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முஹுரத் வர்த்தகத்தை முன்னிட்டு, சுப வர்த்தக நேரத்தை தனி சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.88.67 ஆக நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.