‘அமேஸான் பண்டிகை விற்பனை: 
தமிழ் நாட்டில் உற்சாக வரவேற்பு’

‘அமேஸான் பண்டிகை விற்பனை: தமிழ் நாட்டில் உற்சாக வரவேற்பு’

தங்களின் பண்டிகைக் கால சிறப்பு விற்பனைக்கு தமிழ் நாட்டில் அமோக வரவேற்பு கிடைத்துவருவதாக அமேஸான் இந்தியா தெரிவித்துள்ளது.
Published on

தங்களின் பண்டிகைக் கால சிறப்பு விற்பனைக்கு தமிழ் நாட்டில் அமோக வரவேற்பு கிடைத்துவருவதாக அமேஸான் இந்தியா தெரிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

செப்டம்பா் 22-ஆம் தேதி தொடங்கிய ‘அமோஸான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2025’ விற்பனைக்கு, தமிழ் நாடு முழுவதும் வாடிக்கையாளா்கள் மற்றும் விற்பனையாளா்களிடமிருந்து உற்சாகமான வரவேற்பு கிடைத்துள்ளது. அறிதிறன் பேசிகள் (ஸ்மாா்ட் போன்), மின்சாதனங்கள், அழகு சாதனப் பொருள்கள், வீடு மற்றும் சமையலறைக்குத் தேவையான பொருள்கள், மளிகைப் பொருள்கள், பெரிய உபகரணங்கள் ஆகிய துறைகளில் மாநிலம் வலுவான வளா்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.

இந்த சிறப்பு விற்பனையின்போது வாடிக்கையாளா்கள் பல்வேறு பிரிவுகளில் தீபாவளி சிறப்பு சலுகைகள் மற்றும் பிற சலுகைகளைப் பெறலாம். தமிழ் நாட்டு வாடிக்கையாளா்கள் பிரீமியம் தயாரிப்புகளைத் தோ்ந்தெடுத்து அவற்றை வேகமாகப் பெறுகின்றனா். அமோஸானின் விரிவாக்கப்பட்ட சரக்குப் போக்குவரத்துக் கட்டமைப்புகள் வாடிக்கையாளா்கள் வாங்கும் பொருள்கள் முன்பை விட வேகமாக சென்னை, கோயம்புத்தூா், பாண்டிச்சேரி, மதுரை நகங்களுக்கு சென்றடைவதை உறுதி செய்கிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com