
அமெரிக்காவின் வரி விதிப்பு இந்திய பொருளாதாரத்தில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை என்பதை சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை 6.6% ஆக உயர்த்தி சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.4 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது 6.6% ஆக உயர்த்தி சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது. அதேவேளையில், 2026- 27 நிதியாண்டுக்கான வளர்ச்சி 20 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டு 6.2 சதவீதமாகவும் கணித்துள்ளது.
முன்னதாக, அக்டோபர் தொடக்கத்தில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்த 6.3 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக உயர்த்தி உலக வங்கி கணித்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.