அந்நிய நிதி வெளியேற்றத்தால் பங்குச் சந்தைகள் 2-வது நாளாக சரிவுடன் நிறைவு!

சென்செக்ஸ் 297.07 புள்ளிகள் சரிந்து 82,029.98 புள்ளிகளாகவும், நிஃப்டி 81.85 புள்ளிகள் சரிந்து 25,145.50 புள்ளிகளாக நிலைபெற்றது.
பங்குச் சந்தைகள்
பங்குச் சந்தைகள்
Published on
Updated on
1 min read

மும்பை: பலவீனமான உலகளாவிய குறிப்புகள் மற்றும் அந்நிய நிதி வெளியேற்றம் ஆகியவற்றால், இன்றைய வர்த்தகத்தில் தொடர்ந்து 2-வது நாளாக பங்குச் சந்தை குறியீடுகள் சரிந்து முடிவடைந்தன.

இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் 545.43 புள்ளிகள் சரிந்து 81,781.62 ஆக இருந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 297.07 புள்ளிகள் சரிந்து 82,029.98 புள்ளிகளாக இருந்த நிலையில், நிஃப்டி 81.85 புள்ளிகள் சரிந்து 25,145.50 புள்ளிகளாக நிலைபெற்றது.

நிஃப்டி தொகுப்பில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன், டாடா மோட்டார்ஸ் மற்றும் விப்ரோ உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் பஜாஜ் பைனான்ஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகிய பங்குகள் சரிந்தும் முடிந்தன.

சென்செக்ஸில் பஜாஜ் ஃபைனான்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், டாடா ஸ்டீல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், என்டிபிசி, டிரென்ட், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் டெக் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட், ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குகள் உயர்ந்து முடிவடைந்தன.

நிறுவனங்களின் விற்பனை அழுத்தம்:

அந்நிய நிதி முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) மீண்டும் விற்பனையாளர்களாக மாறினர். தொடர்ந்து 4 நாளாக பங்குகளை வாங்கியுள்ள நிலையில், நேற்றைய அமர்வில் ரூ.240.10 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

உலகளாவிய பலவீனமான குறிப்புகள்:

ஆசிய சந்தைகள் சரிந்து வர்த்தகமானதால், முதலீட்டாளர்களிடம் எச்சரிக்கை மனநிலையை அதிகரித்தது. தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு 1 சதவிகிதம் வரை சரிந்தன. அதே நேரத்தில் ஜப்பானின் நிக்கி 225 மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் 3 சதவிகிதம் வரை சரிந்தன.

வால் ஸ்ட்ரீட் ஃபியூச்சர்களும் 0.5 சதவிகிதம் வரை சரிவடைந்ததையடுத்து நாளின் பிற்பகுதியில் அமெரிக்க சந்தைகள் பலவீனமான தொடக்கத்தை சந்தித்தது.

ரூபாய் சரிவு:

அந்நிய நிதி வெளியேற்றம் வலுவாக இருந்ததால், ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 9 காசுகள் குறைந்து ரூ.88.77 ஆக உள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு:

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய், 0.33 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 63.53 அமெரிக்க டாலராக உள்ளது.

அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையானது, பொதுவாக இந்திய பங்குச் சந்தைகளை பாதிக்கும் அதே வேளையில் பணவீக்கத்தைத் கடந்து நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை அதிகரிக்கக்கூடும்.

இதையும் படிக்க: செப்டம்பரில் குறைந்தது சில்லறை பணவீக்கம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com