
டிவிஎஸ் நிறுவனம் ரைடர் 125 சமீபத்தில் அனைவரையும் கவரும் வகையில் டூயல் டிஸ்க் பிரேக் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட இரண்டு வேரியண்ட்களும் மற்ற வகைகளுடன் ஒப்பிடும்போது சில சுவாரஸ்யமான மாற்றங்களைக் கொண்டுள்ளன.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
124.8 சிசி ஏர் மற்றும் ஆயில் கூல்டு சிங்கிள் சிலிண்டர் 3 வால்வு என்ஜின் இடம் பெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக 11.38 பிஎஸ் பவரையும், 11.2 எம்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.
முதன் முதலாக டூயல் டிஸ்க் பிரேக்கை இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் ஐ-கோ அசிஸ்ட் தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது. பாலோ-மி-ஹெட்லாம்ப் கூடுதலாக அதில் பொருத்தப்பட்டுள்ளது.
இதில் கிளைடு துரோ டெக்னாலஜி தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது. மேலும் டிஎப்டி மற்றும் எஸ்எக்ஸ்சி ஆகிய இரண்டு வேரியண்ட்கள் இடம் பெற்றுள்ளன. இரண்டு வேரியண்டிலும் சிவப்பு நிறத்தை வெளியிட்டுள்ளது. பிரதானமாக சிவப்பும், வெள்ளை மற்றும் ப்ளாக் ஷேடுகளிலும் வழங்கப்பட்டுள்ளது.
இதில் எஸ்எக்ஸ்சி வேரியண்ட் டிஸ்பிளேயுடன் இருக்கும் விலை ரூ.93,800 ஆகவும், டிஎப்டி டிஸ்பிளேயுடன் கொண்டது ரூ. 95,600 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.