
கடந்த செப்டம்பரில் இந்தியாவின் ஏற்றுமதி 3,638 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
இது குறித்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் இருந்து 3,638 கோடி டாலர் மதிப்பிலான பொருள்கள், சேவைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இது, 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 6.74 சதவீதம் அதிகம்.
அதே போல், மதிப்பீட்டு மாதத்தில் நாட்டின் இறக்குமதி 16.6 சதவீதம் உயர்ந்து 6853 கோடி டாலராக உள்ளது.
அந்த மாதத்தில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 3,210 கோடி டாலராக உள்ளது.
தங்கம், வெள்ளி, உரம், மின்னணு பொருள்களின் இறக்குமதி அதிகரித்ததால் இறக்குமதி உயர்ந்தது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பர் காலகட்டத்தில் ஏற்றுமதி 3.02 சதவீதம் உயர்ந்து 22,012 கோடி டாலராக உள்ளது.
இறக்குமதி 4.53 சதவீதம் உயர்ந்து 37,511 கோடி டாலராக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.