
தந்தேராஸ் மற்றும் தீபாவளி விழாக்களை முன்னிட்டு முன்னணி நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான தங்கமயில் ஜுவல்லரியில் வெள்ளிக்கிழமை (அக். 17) முதல் செயின் திருவிழா அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தங்கமயிலின் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக, வெள்ளிக்கிழமை முதல் தீபாவளி வரை நான்கு நாள்களுக்கு செயின் திருவிழா கொண்டாடப்படுகிறது. அப்போது வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து செயின்களுக்கும் மிகக் குறைந்த சேதாரத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த செயின் திருவிழாவில் 6 சதவீதம் வரை சேதாரம் உள்ள செயின்களுக்கு 1.99 சதவீத சேதாரமும் 6 சதவீதத்துக்கும் மேல் சேதாரம் உள்ள செயின்களுக்கு 5.99 சேதாரமும் மட்டுமே கணக்கிடப்படும்.
மேலும் வைர நகைகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.15 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.