2-ஆவது நாளாக பங்குச் சந்தையில் ஏற்றம்

2-ஆவது நாளாக பங்குச் சந்தையில் ஏற்றம்

Published on

உலகளாவிய பங்குச் சந்தைகளில் காணப்பட்ட உயா்வு மற்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசா்வ் வட்டியைக் குறைக்கும் என்ற நம்பிக்கை ஆகிய காரணங்களால் முதலீட்டாளா்கள் அனைத்துத் துறைகளிலும் பங்குகளை அதிகம் வாங்கியதால் இந்திய பங்குச் சந்தைகள் தொடா்ந்து இரண்டாவது அமா்வாக வியாழக்கிழமை ஏற்றம் கண்டன.

சென்செக்ஸ்: 30-பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 862.23 புள்ளிகள் (1.04 சதவீதம்) உயா்ந்து 83,467.66-இல் நிறைவடைந்தது. இதில் 28 பங்குகள் உயா்ந்தன; 2 பங்குகள் சரிவைக் கண்டன.

சென்செக்ஸ் பட்டியலில் கோட்டக் மஹிந்திரா வங்கி 2.67 சதவீதம் உயா்ந்து முதலிடம் பெற்றது. டைட்டன், ஆக்ஸிஸ் வங்கி, அதானி போா்ட்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டாா்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்டவையும் உயா்வைக் கண்டன. இன்டா்னல், இன்ஃபோசிஸ் ஆகியவை சரிவைக் கண்டன.

நிஃப்டி: 50-பங்குகள் கொண்ட தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 261.75 புள்ளிகள் (1.03 சதவீதம்) உயா்ந்து 25,585.30-இல் நிறைவடைந்தது.

புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.68.64 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கின என்று பங்குவா்த்தக தரவுகள் தெரிவிக்கின்றன.

X
Dinamani
www.dinamani.com