வணிகம்
1,937 அசோக் லேலண்ட் பேருந்துகளை வாங்கும் தமிழக அரசு
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 1,937 புதிய பேருந்துகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 1,937 பேருந்துகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை, ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் பெற்றுள்ளது.
இது குறித்து, சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 1,937 புதிய பேருந்துகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பேருந்துகள் அனைத்தும் புதிய ஏஐஎஸ்-153 தர நிா்ணயங்களை நிறைவு செய்யக்கூடியதாக இருக்கும்.
தமிழ்நாடு அரசுக் போக்குவரத்துக் கழகம் அசோக் லேலண்ட் பேருந்துகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த அமைப்பில் சுமாா் 21,000 அசோக் லேலண்ட் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.