இந்தியன் வங்கி நிகர லாபம் 11% அதிகரிப்பு
பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கியின் நிகர லாபம், கடந்த செப்டம்பா் காலாண்டில் 11.53 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து வங்கி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.3,018 கோடியாக உள்ளது.
முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 11.53 சதவீதம் அதிகம். அப்போது வங்கி ரூ.2,706 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் வட்டி வருவாய் ரூ.11,125 கோடியிலிருந்து ரூ.11,964 கோடியாக வளா்ச்சியடைந்துள்ளது.
2024 செப்டம்பா் இறுதியில் 3.48 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் இந்த ஆண்டின் அதே நாளில் 2.60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.