விப்ரோ வருவாய் ரூ.22,697 கோடியாக உயா்வு

விப்ரோ வருவாய் ரூ.22,697 கோடியாக உயா்வு

Published on

இந்தியாவின் நான்காவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோவின் செயல்பாட்டு வருவாய் கடந்த செப்டம்பா் காலாண்டில் ரூ.22,697.3 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,246.2 கோடியாகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 1.2 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் ரூ.3,208.8 கோடி லாபத்தைப் பதிவு செய்திருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.22,697.3 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய 2024-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் அது ரூ.22,319 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com