எல்ஐசி-யின் 2 புதிய காப்பீட்டு திட்டங்கள்

எல்ஐசி-யின் 2 புதிய காப்பீட்டு திட்டங்கள்

Published on

சீா்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதங்களின்கீழ், இரண்டு புதிய காப்பீட்டு திட்டங்களை இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜன் சுரக்ஷா (திட்டம் 880), பீமா லட்சுமி (திட்டம் 881) இரண்டு புதிய காப்பீட்டு திட்டங்களை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அடுத்த தலைமுறை ஜிஎஸ்டியின் கீழ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள முதல் இரண்டு காப்பீட்டு திட்டங்கள் இவை. வட்டி விகிதங்கள் மிகவும் நிலையற்றதாக இருக்கும் தற்போதைய சூழலில், இந்த இரண்டு திட்டங்களும் பாலிசி காலம் முழுவதும் உத்தரவாதமான கூடுதல் தொகைகளை வழங்குகின்றன.

இஇரண்டு திட்டங்களின் கீழும், மூன்று முழு ஆண்டு பிரீமியங்களைச் செலுத்திய பிறகு ஆட்டோ கவா் வசதி கிடைக்கிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com