சிட்டி யூனியன் வங்கியின் 11 புதிய டிஜிட்டல் தயாரிப்புகள்!

சிட்டி யூனியன் வங்கி அறிமுகம் செய்துள்ள புதிய டிஜிட்டல் தயாரிப்புகள் பற்றி...
சிட்டி யூனியன் வங்கியின் 11 புதிய டிஜிட்டல் தயாரிப்புகள்!
Published on
Updated on
1 min read

சிட்டி யூனியன் வங்கி புதிய டிஜிட்டல் பரிவர்த்தனை தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.

வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்தவும், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நிதிச் சேவைகளை எளிமையாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு பல புதுமையான டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகளை சிட்டி யூனியன் வங்கி தயாரித்து வருகின்றது.

இந்திய கட்டண கவுன்சில் (பிசிஐ), தேசிய கட்டண கூட்டமைப்பு (என்பிசிஐ), மற்றும் ஃபின்டெக் ஒருங்கிணைப்பு கவுன்சில் (எஃப்சிசி) ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைத்த குளோபல் ஃபின்டெக் பெஸ்ட் - 2025 நிகழ்ச்சி, மும்பையில் அக்டோபர் 7 முதல் 9 வரை நடைபெற்றது.

இந்த நிகழ்வில், சிட்டி யூனியன் வங்கியின் புதிய டிஜிட்டல் தயாரிப்புகளை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் அறிமுகம் செய்தார்.

சிட்டி யூனியன் வங்கியின் புதிய டிஜிட்டல் தயாரிப்புகள்

  1. ஐஓடி (IoT) கட்டணங்கள் – ‘யுபிஐ சர்க்கிள் – மை டிவைஸ்’,

  2. சிங்கிள் பிளாக் மல்டிபள் டெபிட் ( எஸ்பிஎம்டி - SBMD) – ‘யுபிஐ ரிசர்வ் பே’

  3. எஸ்எல்எம் சாட்பாட் (SLM ChatBot) – ‘யுபிஐ ஹெல்ப்’

  4. யுபிஐ மூலம் பல கையொப்பமிடல் பணிப்பாய்வு அறிமுகம்

  5. மைக்ரோ ஏடிஎம் மூலம் யுபிஐ பயன்படுத்தி பணம் எடுக்கும் வசதி

  6. யுபிஐ-க்கு கூடுதல் அங்கீகார முறைகள் அறிமுகம் – பயோஆத் (BioAuth) மற்றும்

  7. ஃபேஸ்ஆத் (FaceAuth)

  8. பரஸ்பர நிதிக்கு எதிரான கடன் (என்டிபி ஃப்ளோ - NTB Flow)

  9. சியூபி டிசையர் - என்டிபி

  10. சியூபி டிபெண்ட் - யுபிஐ-யில் கிரெடிட் லைன்

  11. சியூபி ரூபே - எம்எஸ்எம்இ கார்டு

Summary

11 New digital products launched by City Union bank

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com