பண்டிகைக் காலம்: 1 லட்சத்தை கடந்த டாடா கார்கள் விற்பனை

நவராத்திரி முதல் தீபாவளி வரையிலான பண்டிகைக் காலத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.
பண்டிகைக் காலம்: 1 லட்சத்தை கடந்த டாடா கார்கள் விற்பனை
Published on
Updated on
1 min read

புது தில்லி: நவராத்திரி முதல் தீபாவளி வரையிலான பண்டிகைக் காலத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நவராத்திரியில் தொடங்கி தீபாவளி வரை 30 நாள்களுக்கு நீடித்த நடப்பாண்டின் பண்டிகைக் காலத்தில் நிறுவனம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வாகனங்களை விற்பனை செய்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 33 சதவீத வளர்ச்சியாகும்.

மதிப்பீட்டுக் காலகட்ட விற்பனையில் எஸ்யுவி வாகனங்கள் முன்னிலை வகித்தன. மின்சார வாகனங்களும் வலுவான வளர்ச்சியை பதிவு செய்தன. நெக்ஸான் 38,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை விற்பனை செய்து 73 சதவீத வளர்ச்சியையும், பஞ்ச் 32,000 வாகனங்களை விற்பனை செய்து 29 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்தது.

இந்த காலகட்டத்தில் 10,000-க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் விற்பனையாகி, 37 சதவீத வளர்ச்சியைக் கண்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com