
சென்னை: சென்னையின் சிறுசேரி பகுதியில் பொதுத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆஃப் இந்தியாவின் (பிஓஐ) புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பேங்க் ஆஃப் இந்தியா நிறுவப்பட்டதன் 120-ஆம் ஆண்டு தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னையைச் சேர்ந்த சிறுசேரி பகுதியில் வங்கியின் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டல மேலாளர் மோகன் மாரேதி தலைமையில் திறக்கப்பட்ட இந்த புதிய கிளையுடன், மண்டலத்தில் வங்கி கிளைகளின் எண்ணிக்கை 83-ஆக உயர்ந்துள்ளது.
இந்த புதிய கிளையின் துவக்கம் நாடு முழுவதும் கிளை வலையமைப்பை விரிவுபடுத்தி, மக்களுக்கு மேலும் பரந்த அளவில் சேவை வழங்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.