
புது தில்லி: விவசாய மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கான சில்லறை பணவீக்கம் கடந்த செப்டம்பரில் முறையே -0.07 சதவீதமாகவும் 0.31 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
இது குறித்து மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2025 செப்டம்பர் மாதம் விவசாயத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (சிபிஐ-ஏஎல்) 0.11 புள்ளிகள் குறைந்து 136.23-ஆகவும், ஊரகத் தொழிலாளர்களுக்கான குறியீடு (சிபிஐ-ஆர்எல்) 0.18 புள்ளிகள் குறைந்து 136.42-ஆகவும் உள்ளன. முந்தைய ஆகஸ்ட் மாதம் முறையே 136.34 மற்றும் 136.60 புள்ளிகளாக இருந்தன.
மதிப்பீட்டு மாதத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கான உணவு குறியீடு 0.47 புள்ளிகளும், ஊரகத் தொழிலாளர்களுக்கான உணவு குறியீடு 0.58 புள்ளிகளும் குறைந்தன. உணவு பணவீக்கம் விவசாயத் தொழிலாளர்களுக்கு -2.35 சதவீதமாகவும், ஊரகத் தொழிலாளர்களுக்கு -1.81 சதவீதமாகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்தின் தொழிலாளர் அலுவலகம் வெளியிடுகிறது. இந்தக் குறியீடுகள் 34 மாநிலங்கள்/பிரதேசங்களில் 787 மாதிரி கிராமங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.