எஸ்பிஐ கார்டு லாபம் 10% உயர்வு!

நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில், எஸ்பிஐ கார்டு மற்றும் கட்டண சேவைகள் தனது நிகர லாபம் 10.15 சதவிகிதம் அதிகரித்து ரூ.445 கோடியாக உள்ளது என்றது.
எஸ்பிஐ கார்டு லாபம் 10% உயர்வு!
Published on
Updated on
1 min read

புதுதில்லி: நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில், எஸ்பிஐ கார்டு மற்றும் கட்டண சேவைகள் நிறுவனத்தின் நிகர லாபம் 10.15% அதிகரித்து ரூ.445 கோடியாக உள்ளது.

கடந்த நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.404 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் மொத்த வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 13 சதவிகிதம் அதிகரித்து ரூ.5,136 கோடியாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு இதே காலாண்டில் அது ரூ.4,556 கோடியாக இருந்தது. அதே வேளையில் நிறுவனத்தின் வட்டி வருமானம் 9% உயர்ந்து ரூ.2,490 கோடியாக உள்ளது.

மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் கட்டணம் மற்றும் கமிஷன் வருமானம் 16 சதவிகிதம் அதிகரித்து ரூ.2,471 கோடியாக இருந்தது. அதே வேளையில் கடன் வாங்குவதற்கான செலவு குறைவாக இருந்ததால் நிதிச் செலவுகள் 4 சதவிகிதம் குறைந்து ரூ.760 கோடியாக உள்ளது என்றது.

இருப்பினும், மொத்த இயக்கச் செலவு 24 சதவிகிதம் அதிகரித்து நிதியாண்டு 2026ல், 2-வது காலாண்டில் அது ரூ.2,484 கோடியாக இருந்தது. இதுவே கடந்த வருடம் இது ரூ.2,011 கோடியாக இருந்தது.

செப்டம்பர் 30, 2025 நிலவரப்படி மொத்த இருப்புநிலைக் ரூ.69,862 கோடியாக இருந்தது. இதுவே மார்ச் 31, 2025 அன்று ரூ.65,546 கோடியாக இருந்தது.

இன்றைய வர்த்தகத்தில் எஸ்பிஐ கார்டின் பங்குகள் ரூ.930.40 ஆக பிஎஸ்இ-யில் முடிவடைந்தது. இது அதன் முந்தைய முடிவை விட 0.21 சதவிகிதம் அதிகமாகும்.

இதையும் படிக்க: கோகோ-கோலா இந்தியா லாபம் 73% சரிவு!

Summary

SBI Cards and Payment Services on Friday reported 10.15 per cent increase in net profit at Rs 445 crore for the second quarter of the current fiscal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com