

பங்குச் சந்தைகள் இன்று(வெள்ளிக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில் தற்போது சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,667.23 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.40 மணியளவில் 152.20 புள்ளிகள் குறைந்து 84,404.20 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதிகபட்சமாக சென்செக்ஸ்
84,707.40 புள்ளிகளை எட்டியது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 48.90 புள்ளிகள் குறைந்து 25,842.50 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தொடர்ச்சியாக 6 நாள் ஏற்றத்திற்குப் பிறகு பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகமாவது குறிப்பிடத்தக்கது.
ஹிந்துஸ்தான் யூனிலீவர், கோடக் வங்கி, ஆக்சிஸ் வங்கி, டைட்டன், பவர் கிரிட், ஐடிசி, அதானி போர்ட்ஸ், என்டிபிசி, டெக் எம், எடர்னல், மாருதி சுசுகி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை இன்று சென்செக்ஸில் அதிக இழப்பைச் சந்தித்தன.
அதேநேரத்தில் ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல், பிஇஎல், எம்&எம், பாரதி ஏர்டெல், எச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டின.
நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 0.05%, நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 0.18% சரிந்தது.
துறைகளில் நிஃப்டி மெட்டல், ரியாலிட்டி, ஐடி, ஆட்டோ துறைகள் முன்னேற்றமடைந்த நிலையில் நிஃப்டி எஃப்எம்சிஜி பின்னடைவுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.