

மும்பை: ஆறு நாள் ஏற்றம் மற்றும் அந்நிய நிதி வெளியேற்றத்தைத் தொடர்ந்து எஃப்எம்சிஜி மற்றும் வங்கிப் பங்குகளில் முதலீட்டாளர்கள் இன்று லாபம் ஈட்டியதன் காரணமாக பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிந்து நிறையவடைந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 599.25 புள்ளிகள் சரிந்து 83,957.15 ஆக இருந்தது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 344.52 புள்ளிகள் சரிந்து 84,211.88 ஆகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 96.25 புள்ளிகள் சரிந்து 25,795.15 ஆக நிலைபெற்றது.
இந்தநிலையில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா அவசரமாகவோ எந்தவித வர்த்தக ஒப்பந்தங்களை செய்து கொள்வதில்லை என்று கூறியதையடுத்து, முதலீட்டாளர்களின் மனநிலை மோசமானது.
சென்செக்ஸில் இந்துஸ்தான் யூனிலீவர் அதிகபட்சமாக 3.20 சதவிகிதம் வரை சரிந்த நிலையில், அல்ட்ராடெக் சிமென்ட், கோடக் மஹிந்திரா வங்கி, அதானி போர்ட்ஸ், டைட்டன், எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவையும் சரிந்தன. இருப்பினும் பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சன் பார்மா ஆகியவை உயர்ந்து முடிவடைந்தன.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் நாங்கள் கலந்து அலோசித்து வருகிறோம். அதே வேளையில் அமெரிக்காவுடன் பேசுகிறோம், ஆனால் அவசரப்பட்டு நாங்கள் எந்தவித ஒப்பந்தங்களையும் மேற்கொள்வதில்லை, என்றாலும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம் என்று ஜெர்மனியில் நடைபெற்று வரும் வர்த்தக பேச்சுவார்த்தை முன்னதாக பெர்லின் தெரிவித்தார் அமைச்சர் கோயல்.
ஆசிய சந்தைகளில் தென் கொரியா கோஸ்பி, ஜப்பான் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங் ஹாங் செங் ஆகியவை உயர்ந்தன.
ஐரோப்பாவில் சந்தைகள் கலவையான முறையில் வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) நேர்மறையான நிலையில் முடிவடைந்தன.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வியாழக்கிழமை அன்று ரூ.1,165.94 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்த நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.3,893.73 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
6 நாள் ஓட்ட ஏற்றத்தை முடித்து கொண்டு, நிஃப்டி 96 புள்ளிகள் சரிந்து 25,795 புள்ளிகளாக நிலைபெற்றது. ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீதான அமெரிக்கத் தடைகளும், அதே வேளையில் முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டியதால் பங்குச் சந்தைகள் வெகுவாக அழுத்தத்தில் இருந்தது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.24 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 65.83 அமெரிக்க டாலர்களாக உள்ளது.
இதையும் படிக்க: யூகோ வங்கி நிகர லாபம் 3% உயா்வு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.