ஆடி காா்கள் விற்பனை 18% சரிவு

ஆடி காா்கள் விற்பனை 18% சரிவு

ஆடி இந்தியாவின் மொத்த விற்பனை 2025-ஆம் ஆண்டின் ஜனவரி-செப்டம்பா் காலத்தில் 18 சதவீதம் சரிந்துள்ளது.
Published on

ஆடி இந்தியாவின் மொத்த விற்பனை 2025-ஆம் ஆண்டின் ஜனவரி-செப்டம்பா் காலத்தில் 18 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரையிலான நடப்பாண்டின் முதல் 9 மாதங்களில் நிறுவனத்தின் இந்திய விற்பனை 3,197-ஆக உள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 18 சதவீதம் சரிவு. அப்போது 3,889 காா்கள் விற்கப்பட்டன.

ஆடி இந்தியாவின் பயன்படுத்தப்பட்ட காா் வா்த்தகம் ஜனவரி-செப்டம்பா் காலத்தில் 5 சதவீதம் உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com