

காலணி தயாரிப்பு முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான பாட்டா இந்தியா லிமிடெட் நிகர லாபத்தில் 73 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. செப். 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் பாட்டாவின் நிகர லாபம் ரூ.13.90 கோடியாகக் குறைந்து (73.26 சதவீதம்) தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் குறைவு மற்றும் செலவினம் அதிகரிப்பு ஆகியவையே இதற்கான முக்கிய காரணங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் இந்நிறுவனத்தில் நிகர லாபம் ரூ. 51.98 கோடியாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.