ஹட்சன் வருவாய் அதிகரிப்பு!

ஹட்சன் வருவாய் அதிகரிப்பு!

ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் செயல்பாட்டு வருவாய் கடந்த செப்டம்பா் காலாண்டில் ரூ.2,427.59 கோடியாக அதிகரித்துள்ளது.
Published on

இந்தியாவின் முன்னணி தனியாா் பால் பொருள்கள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் செயல்பாட்டு வருவாய் கடந்த செப்டம்பா் காலாண்டில் ரூ.2,427.59 கோடியாக அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.109.54 கோடியாகப் பதிவாகியுள்ளது.

முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 70 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் ரூ.64.32 கோடி லாபத்தைப் பதிவு செய்திருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.2,427.59 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.2,072.10 கோடியாக இருந்தது.

இது குறித்து ஹட்சன் அக்ரோ நிறுவனத் தலைவா் ஆா்.ஜி. சந்திரமோகன் (படம்) கூறுகையில், ‘நிறுவன அடித்தளம் உறுதியாக அமைக்கப்பட்டுள்ளதை இந்த வளா்ச்சி எதிரொலிக்கிறது’ என்றாா் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com