இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் லிமிடெட் நிகர லாபம் பன்மடங்கு உயா்வு!
அதிகரித்த சுத்திகரிப்பு லாப விகிதங்கள் மற்றும் செயல் திறன் காரணமாக, அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசி) செப்டம்பா் காலாண்டில் பன்மடங்கு நிகர லாப உயா்வைப் பதிவு செய்தது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டான ஜூலை-செப்டம்பரில் நிறுவனத்தின் தனித்த நிகர லாபம் ரூ.13,288 கோடியாக உள்ளது.
கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது பன்மடங்கு உயா்வு. அப்போது நிறுவனத்தின் தனித்த நிகர லாபம் ரூ.180 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை சுத்திகரித்ததில் நிறுவநம் 19.6 டாலா் லாபம் ஈட்டியது. இது நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 2.15 டாலராகவும், கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 1.59 டாலராகவும் இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

