

சாம்சங் கேலக்ஸி எம் 17 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தைகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங்கில் முதல்முறையாக ஓஐஎஸ் லென்ஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் எந்தவித தடுமாற்றமுமின்றி விடியோக்களை சீராகப் பதிவு செய்ய முடியும்.
இந்த ஸ்மார்ட்போனில் புதிதாக அறிய விரும்புபவைகளை வட்டமிட்டு தேடும் வசதி உள்ளது. ஜெமினி லைவ் போன்ற செய்யறிவு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
தென்கொரியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சாம்சங் நிறுவனம், இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன. அந்தவகையில் தற்போது சாம்சங் கேலக்ஸி எம் 17 5ஜி அறிமுகமாகியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம் 17 சிறப்பம்சங்கள்
6.7 அங்குல அமோலிட் தொடுதிரை கொண்டுள்ளது.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 1100 nits திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1330 சிப்செட் கிராஃபிக்ஸ் அட்டை மற்றும் ஆன்டிராய்டு 15 உடைய புராசஸர் கொண்டது.
2TB வரை நினைவகத்தை விரிவாக்கம் செய்துகொள்ளலாம்.
50MP அல்ட்ரா வைட் லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா உடையது. முன்பக்கம் 13MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.
நீர் மற்றும் தூசி புகாத்தன்மைக்காக IP54 திறன் கொண்டுள்ளது. 5000mAh பேட்டரி திறன் கொண்டது. 25W சார்ஜ் செய்யும் திறன் கொண்டது.
4GB உள் நினைவகம் 128 GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 12,499க்கு விற்பனை செய்யப்படுகிறது.
6 GB உள் நினைவகம் 128 GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 13,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.
8GB உள் நினைவகம் 128 GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 15,499க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.