

ஜெய்ப்பூரைச் சேர்ந்த 25 மாணவர், நிறுவனர் ஸ்பார்ஷ் அகர்வால், வாய் மொழியாக கேள்வி எழுப்பினால், வாய் மொழியாகவே பதில் சொல்லும் சூப்பர் ஏஐ மாடலை உருவாக்கியுள்ளார்.
இதற்கு லூனா என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பாடல்களைப் பாடும், கிசுகிசு பேசும், உணர்வுப்பூர்வமான கேள்விகளுக்கும் அதே உணர்வுடன் குரலில் ஏற்றத்தாழ்வுடன் பதிலளிக்கும் என்று தெரிவிக்கப்படுள்ளது.
பிக்ஸா ஏஐ என்ற புத்தாக்க நிறுவனத்தை நிறுவிய ஸ்பார்ஷ் அகர்வால், உருவாக்கியிருக்கும் லூனா என்ற செய்யறிவு, மனிதர்கள் வார்த்தைகளால் கூறி அதனை எழுத்துகளாக மாற்றி செய்யறிவிடம் கூறி பதில் பெறுவதை எளிதாக்குகிறது.
ஒரு இயந்திரத்திடம் பேசுவதைப் போல அல்லாமல், மனிதர்களிடம் பேசுவதைப் போன்ற உணர்வைக் கொடுக்கும் என்றும் ஸ்பார்ஷ் கூறியுள்ளார்.
மேலும், அண்மையில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை தான் சந்தித்ததாகவும் இத்துறை தலைவர்களிடமிருந்து பாராட்டுகள் வந்ததாகவும் கூறினார்.
செய்யறிவு துறையில் இந்தியா எங்கே இருக்கிறது? அனைத்து வாட்ஸ்ஆப் குழுக்களிலும், அனைத்து கருத்தரங்கு அறைகளிலும் இருக்கிறது. இப்போது நாங்கள் இதற்கான பதிலை அளிக்கிறோம், இன்று உலகின் முதல் குரல் வழியில் பதில் சொல்லும் செய்யறிறை அறிமுகப்படுத்துகிறோம். பேசுவது, ஆடியோ, இசை என அனைத்தையும் இதனால் அறிய முடியும் என்று கூறினார்.
என்னிடம் போதிய பணமும் இல்லை, வசதியாக தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்களும் இல்லை. கடன் பெற்று இதனை செய்திருக்கிறேன், இதன் மூலம், உலகத் தரமான தொழில்நுட்பம் இந்தியாவிலிருந்து தான் வளர்கிறது என்பதை உறுதிசெய்திருக்கிறேன் என்றார்.
இதுவரை உருவாக்கப்பட்டவை, வாடிக்கையாளர் சேவைக்காக உருவாக்கப்பட்டவை. இவை உணர்வுப்பூர்வமாக பதிலளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் அகர்வால் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.