

ஆப்பிள் நிறுவனம், ஒரே காலாண்டில் இதுவரை இல்லாத வகையில் 100 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது.
அதாவது, கடந்த ஜூலை - செப்டம்பர் மாதம் வரையிலான மூன்றாம் காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் 102.5 பில்லியன் டாலர்களை ஈட்டியிருக்கிறது. செய்யறிவு வளர்ச்சி ஏற்படுத்திய சவால் மற்றும் வர்த்தகப் போரினால் ஏற்பட்ட அழுத்தங்களை எல்லாம் தாண்டி, ஐஃபோன் 17 மாடல் நல்ல விற்பனையை அடைந்திருப்பதையே இது காட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக், நிறுவனத்தின் வளர்ச்சி வரும் காலங்களில் மேலும் அதிகமாகவே இருக்கும் என்றும் 10 - 12 சதவிகிதம் வரை இருக்கலாம் என்றும் கணித்துள்ளார்.
பல்வேறு சவால்களையும் தாண்டி, சில ஐஃபோன்களுக்கு எதிரான எதிர்மறைக் கருத்துகளையும் தகவர்த்து, இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டை விட கூடுதலாக 10 லட்சம் ஐஃபோன்களை விற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மிகப் புகழ்பெற்ற மாடல்களுக்கான செல்போன் விலைகளைக் கூட 100 டாலர் வரை உயர்த்தியும் விற்பனை செய்த நிலையில், போன் விற்பனை குறையவில்லை என்றும், சேவை வருவாயும் 28.8 பில்லியன் டாலர்கள் வரை உயர்ந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.