புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பிபிசிஎல் நிகர லாபம் 169% உயர்வு!

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு லாப வரம்பு அதிகரிப்பின் பின்னணியில், பாரத் பெட்ரோலியம் அதன் 2-வது காலாண்டு நிகர லாபம் 169% உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

News image

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் - கோப்புப் படம்

Updated On :31 அக்டோபர் 2025, 3:38 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு லாப வரம்பு அதிகரிப்பின் பின்னணியில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் இன்று அதன் 2-வது காலாண்டு நிகர லாபம் 169% உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நிதியாண்டின் 2-வது காலாண்டில் அதன் நிகர லாபம் ரூ.6,442.53 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ.2,397.93 கோடியை விட இது 169% அதிகமாகும்.

ஜூலை முதல் செப்டம்பர் 2024 வரை பீப்பாய் ஒன்றுக்கு மொத்த சுத்திகரிப்பு லாபமானது 4.41 அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடும்போது, ​​ஒவ்வொரு பீப்பாய் கச்சா எண்ணெயையும் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களாக மாற்றுவதன் மூலம் நிறுவனம் 10.78 அமெரிக்க டாலர்களை ஈட்டியது.

தனது சுத்திகரிப்பு நிலையங்களில் 2-வது காலாண்டில் 9.82 மில்லியன் டன் உற்பத்தியை எட்டியதாகவும், திறன் பயன்பாடு 111% உயர்ந்துள்ளதாக தெரிவித்தது.

பாரத் பெட்ரோலியம் காலாண்டு உள்நாட்டு விற்பனையை 12.67 மில்லியன் டன்களாக பதிவு செய்த நிலையில், 2025 நிதியாண்டின் 2-வது காலாண்டில் இது 12.39 மில்லியன் டன்களுடன் ஒப்பிடும்போது 2.26% அதிகரிப்பு.

இதனிடையில், வாரியமானகது பங்கு ஒன்றுக்கு ரூ.7.5 என்ற இடைக்கால ஈவுத்தொகையை அங்கீகரித்துள்ளது.

Bharat Petroleum Corporation Ltd on Friday reported a 169 per cent jump in its September quarter net profit on the back of a surge in refining margins.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.