
ஆப்பிள் ஐஃபோன் 17 வரிசைகள் அறிமுகம் ஆவதற்கான நாள்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஐஃபோன் 16 மாடல்களின் விலைகளில் மாபெரும் தள்ளுபடிகளை ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ளது.
ஏற்கனவே ரூ.17 ஆயிரம் வரை அமேஸான் தள்ளுபடி அறிவித்திருந்த நிலையில், இந்த போட்டியில் ஃபிளிப்கார்ட் இணைந்துள்ளது.
ஆப்பிள் ஐஃபோன் 17 வரிசைகளை வாங்குவதற்காக காத்திருந்தவர்களுக்கு செப்டம்பர் மாதம் திருவிழாப்போலத்தான். ஆனால், புதிய மாடலை வாங்கும் அளவுக்கு பணம் செலவிட விரும்பாதவர்களுக்கும், பழைய மாடல் விலைத் தள்ளுபடியால் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அமேஸானில் ஐஃபோன் 16 ரூ.69,999க்கு அதாவது 12 சதவீத தள்ளுபடியுடன் விற்பனையாகிறது. ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கினால் ரூ.3000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.
அது மட்டுமல்லாமல் நல்ல நிலையில் உள்ள ஐஃபோன் மாடல்களைக் கொடுத்து புதிய போன் வாங்கினால் ரூ.36,050 கூடுதல் தள்ளுபடியாகவும் கிடைக்கும். எனவே, அமேஸான் டீல் மூலம் ரூ.40 ஆயிரத்துக்கும் குறைவாகக் கூட ஐஃபோன் வாங்க முடியும்.
ஃபிளிப்கார்டில் 10 சதவீத விலைத் தள்ளுபடியுடன் ரூ.71,399க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதில்லாமல், சில வங்கிகளின் கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்தி வாங்கினால் அதற்கு கூடுதல் சலுகையும் கிடைக்கும்.
மேலும், இஎம்ஐ கட்டணம் இல்லை, பழைய ஐஃபோன் மாடலைக் கொடுத்து புதிய போன் வாங்கினால் அதற்கு ரூ.61,700 வரை தள்ளுபடி என மிகப்பெரிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, புதிய மாடல் ஐஃபோன்களை வாங்க வேண்டும் என்று காத்திருந்தவர்களுக்கு இதுதான் ஜாக்பாட். புதிய வரவுகளால் பழைய மாடல்களின் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
இந்த செப்டம்பரில், ஐஃபோன் 17 வரிசையில் நான்கு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளன. ஐஃபோன் 17, ஐஃபோன் 17 ஏர், ஐஃபோன் 17 ப்ரோ மற்றும் ஐஃபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் அறிமுகம் செய்யவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.