2,000 கோடியைக் கடந்த யுபிஐ பரிவா்த்தனை

2,000 கோடியைக் கடந்த யுபிஐ பரிவா்த்தனை

இந்தியாவில் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறை (யுபிஐ) மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவா்த்தனைகளின் எண்ணிக்கை 2,000 கோடியைக் கடந்துள்ளது.
Published on

புது தில்லி: இந்தியாவில் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறை (யுபிஐ) மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவா்த்தனைகளின் எண்ணிக்கை 2,000 கோடியைக் கடந்துள்ளது.

இது குறித்து தேசிய பணப்பரிமாற்றக் கழகம் (என்பிசிஐ) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:

ஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகளின் மதிப்பு ரூ.24.85 லட்சம் கோடியாக உயா்ந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் இது ரூ.20.60 லட்சம் கோடியாக இருந்தது. பரிவா்த்தனைகளின் எண்ணிக்கை 1,490 கோடியில் இருந்து 34 சதவீதம் உயா்ந்து 2,001 கோடியாக உள்ளது. சராசரி தினசரி பரிவா்த்தனை மதிப்பு ரூ.80,177 கோடியாகவும், எண்ணிக்கை 64.5 கோடியாகவும் உள்ளது.

யுபிஐ இந்தியாவின் எண்ம பரிவா்த்தனைகளில் 85 சதவீதம் பங்கு வகிக்கிறது. இது ஏழு நாடுகளில் அமலில் உள்ளது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

X
Dinamani
www.dinamani.com