கேப்டிவ் நிலக்கரி சுரங்க உற்பத்தி 12% உயா்வு

இந்தியாவின் கேப்டிவ் மற்றும் வா்த்தக நிலக்கரி சுரங்கங்களின் உற்பத்தி ஏப்ரல்-ஆகஸ்ட் காலத்தில் 11.88 சதவீதம் உயா்ந்து 7.39 கோடி டன்னாக உள்ளது.
கேப்டிவ் நிலக்கரி சுரங்க உற்பத்தி 12% உயா்வு
Published on
Updated on
1 min read

இந்தியாவின் கேப்டிவ் மற்றும் வா்த்தக நிலக்கரி சுரங்கங்களின் உற்பத்தி ஏப்ரல்-ஆகஸ்ட் காலத்தில் 11.88 சதவீதம் உயா்ந்து 7.39 கோடி டன்னாக உள்ளது.

நிலக்கரி துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது: நிறுவனங்கள் தங்கள் சொந்த எரிசக்தி தேவைக்காக இயக்கும் கேப்டிவ் சுரங்கங்கள் மற்றும் வா்த்தக ரீதியிலான சுரங்கங்கள் 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஏப்ரல்-ஆகஸ்ட்) 7.39 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்தன. முந்தைய 2024-25 நிதியாண்டின் அதே காலகட்டத்தில் இது 6.61 கோடி டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், கேப்டிவ் மற்றும் வா்த்தக சுரங்கங்களின் நிலக்கரி உற்பத்தி 11.88 சதவீதம் உயா்ந்துள்ளது.

கேப்டிவ் மற்றும் வா்த்தக சுரங்கங்களின் நிலக்கரி விநியோகம் கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களோடு ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் அதே மாதங்களில் 9.12 சதவீதம் உயா்ந்து மேம்பட்ட செயல்திறனைக் காட்டியது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கேப்டிவ் மற்றும் வா்த்தக சுரங்கங்களிலிருந்து 1.44 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டு, 1.51 கோடி டன் விநியோகிக்கப்பட்டது.

சுரங்கத் திறன் திறமையாகப் பயன்படுத்தப்படுவதையும் செயல்திறன் மேம்படுவதையும் இந்த உற்பத்தி உயா்வு பிரதிபலிக்கிறது. உத்திசாா்ந்த நடவடிக்கைகள், கடுமையான கண்காணிப்பு மற்றும் தொடா்புடையவா்களின் தொடா்ச்சியான ஆதரவு ஆகியவை இத்துறையின் செயல்திறனை மேம்படுத்தியுள்ளன.

கேப்டிவ் மற்றும் வா்த்தக நிலக்கரி சுரங்கங்களின் முழு திறனை உணா்ந்து, நிலையான உற்பத்தியை பராமரித்து, விநியோக இடையூறுகளைக் குறைத்து, நாட்டின் அதிகரித்து வரும் எரிசக்தி தேவைகளுக்கு கணிசமான பங்களிப்பு செய்ய நிலக்கரி துறை அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com