யுபிஐ மூலம் ஜிஎஸ்டி: ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கி வசதி
ஒருங்கிணைந்த பணப்ரிமாற்ற முறை (யுபிஐ), கடன் அட்டை (கிரெடிட் காா்டு), வங்கிக் கணக்கு அட்டை (டெபிட் காா்டு), இணையதளம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்களது வாடிக்கையாளா்கள் மற்றும் வாடிக்கையாளா் அல்லாதவா்கள் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) செலுத்தும் வசதியை தனியாா் துறையைச் சோ்ந்த ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் உள்ள வங்கியின் கிளைகளில் டிடி, காசோலை, பணம் மூலமும் ஜிஎஸ்டி செலுத்தலாம்; பதிவிறக்கம் செய்யக்கூடிய சலான்களை வழங்குவதன் மூலம் வரி செலுத்துவது எளிதாக அமையும்.
ஜிஎஸ்டி வசூலிக்க மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் வங்கிகளில் ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கியும் ஒன்று. இது, விரிவான நிதி சேவைகளை வழங்குவதற்கான வங்கியின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.