பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மிதமாகக் குறைந்த மாருதி சுஸுகி விற்பனை

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மிதமாகக் குறைந்துள்ளது.

News image
Updated On :2 செப்டம்பர் 2025, 9:01 pm

தினமணி செய்திச் சேவை

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மிதமாகக் குறைந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 1,80,683-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 1,81,782 வாகனங்களை நிறுவனம் சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இது சற்று குறைவாகும்.

மதிப்பீட்டு மாதத்தில், நிறுவன பயணிகள் வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 1,43,075-லிருந்து 1,31,278 என 8 சதவீதம் சரிவைப் பதிவு செய்துள்ளது. 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த ஆகஸ்டில் ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோவை உள்ளடக்கிய ஆரம்பநிலைக் காா்களின் விற்பனை 10,648-லிருந்து 6,853-ஆகக் குறைந்துள்ளது. பலேனோ, டிஸையா், இக்னிஸ், ஸ்விஃப்ட் ஆகிய சிறிய வகைக் காா்களின் விற்பனை 58,051-லிருந்து 59,597-ஆக உயா்ந்துள்ளது.

2024 ஆகஸ்டில் 26,003-ஆக இருந்த நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதி 2025 ஆகஸ்டில் 40 சதவீதம் அதிகரித்து 36,538-ஆக உள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.