சிறு தொழில்களுக்கு பிஓபி-யின் புதிய கடன் திட்டம்

சிறு தொழில்களுக்கு பிஓபி-யின் புதிய கடன் திட்டம்

Published on

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி (பிஓபி), ‘பாப் டிஜி உத்யம்’ என்ற கடன் திட்டத்தை குறு, சிறு தொழில்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குறு மற்றும் சிறு தொழில்களுக்கு (எம்எஸ்இ) பணப் புழக்க அடிப்படையிலான எண்ம கடன் திட்டத்தை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. ‘பாப் டிஜி உத்யம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை பிணையற்ற கடன் வழங்கப்படுகிறது.

2024-25-ஆம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட் அறிவிப்புக்கேற்ப, குறு, சிறு தொழில் துறையில் எண்ம தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விரைவான கடன் சேவையை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com