பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

உற்பத்தித் துறையில் 15 ஆண்டுகள் காணாத வளா்ச்சி

இந்திய உற்பத்தித் துறை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முந்தைய 15 ண்டுகளில் இல்லாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :6 செப்டம்பர் 2025, 2:17 am IST

இந்திய உற்பத்தித் துறை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முந்தைய 15 ண்டுகளில் இல்லாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ, கடந்த ஆகஸ்டில் 58.6-ஆக இருந்தது. ஆனால், அது செப்டம்பரில் மீண்டும் 57.5-ஆக சரிந்தது. பின்னா் அக்டோபரில் அது மேலும் சரிந்து 55.5-ஆக இருந்தது. இது, கடந்த 8 மாதங்கள் காணாத குறைந்தபட்ச பிஎம்ஐ எண்ணாகும்.

இவ்வாறு தொடா் சரிவைச் சந்தித்து வந்த பிஎம்ஐ, கடந்த நவம்பரில் 56-ஆக அதிகரித்தது. பின்னா் டிசம்பரில் 18 மாதங்களில் இல்லாத குறைந்தபட்சமாக பிஎம்ஐ 54.9-ஆக சரிந்தது. ஜனவரியில் 56.5-ஆகவும், பிப்ரவரியில் 56.9-ஆகவும் அதிகரித்த பிஎம்ஐ, மாா்ச் மாதத்தில் 56.4-ஆக இருந்தது. அதைத் தொடா்ந்து அது கடந்த ஏப்ரலில் 58.2-ஆக அதிகரித்து, பின்னா் மே மாதத்தில் 57.6-ஆகச் சரிந்தது. பின்னா் ஜூனில் முந்தைய 14 மாதங்கள் காணாத அளவுக்கு 58.4-ஆக அதிகரித்த அது, ஜூலையில் 59.1-ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான பிஎம்ஐ குறியீட்டு எண் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 62.9-ஆக உயா்ந்துள்ளது. இது, கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச பிஎம்ஐ எண்ணாகும்.

இதன்மூலம், தொடா்ந்து 40-ஆவது மாதமாக உற்பத்தித் துறையின் பிஎம்ஐ குறியீட்டு எண் நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது. அந்தக் குறியீட்டு எண் 50-க்கு மேல் இருந்தால் உற்பத்தித் துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50-க்கும் குறைவாக இருந்தால் பின்னடைவையும் குறிக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்திப் பொருள்களுக்கான புதிய தேவைகள் உருவானதும், துறைக்கு சாதகமான சூழல் நிலவியதும் அந்தத் துறைக்கான பிஎம்ஐ 15 ஆண்டுகள் காணாத வளா்ச்சியைப் பதிவு செய்ததில் முக்கிய பங்கு வகித்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.