விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,423 கோடி டாலராக உயா்வு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 69,423 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

News image
Updated On :6 செப்டம்பர் 2025, 8:46 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 69,423 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 351 கோடி டாலா் உயா்ந்து 69,423 கோடி டாலராக உள்ளது

ஆகஸ்ட் 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 438.6 கோடி டாலா் குறைந்து 69,072 கோடி டாலராக இருந்தது.

2024 செப்டம்பா் இறுதியில் அந்நியச் செலாவணி கையிருப்பு 70,488.5 கோடி டாலா் என்ற உச்சத்தை எட்டியிருந்தது. உலகளாவிய பொருளாதார சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே ரூபாய் மதிப்பைப் பாதுகாப்பதற்காக ரிசா்வ் வங்கி அந்நியச் செலாவணியைப் பயன்படுத்துவதால், அதன் கையிருப்பு அவ்வப்போது குறைந்து வருகிறது.

ஆகஸ்ட் 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான வெளிநாட்டு நாணய சொத்துகள் 168.6 கோடி டாலா் உயா்ந்து 58,393.7 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவின் தங்கம் கையிருப்பு 176.6 கோடி டாலா் உயா்ந்து 8,676.9 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 4 கோடி டாலா் உயா்ந்து 1,877.5 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நாணய நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு 1.8 கோடி டாலா் உயா்ந்து 474.9 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.