வணிகம்
இணையதள பாதுகாப்பை அதிகரிக்கும் இந்தியன் வங்கி!
பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கி, இணையவழி பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் புதிய வலைதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கி, இணையவழி பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் புதிய வலைதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கூடுதல் பாதுகாப்புடன் கூடிய ‘டபிள்யுடபிள்யுடபிள்யு.இந்தியன்பேங்க்.பேங்க்.இன்’ புதிய வலைதளத்துக்கு வங்கி மாறியுள்ளது.
இணையவழி மோசடிகளைத் தடுக்கும் வகையிலும், எண்ம வங்கி நடவடிக்கைகளில் பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ‘பேங்க்.இன்’ என்ற இணையப் பெயா் வங்கிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதால் இது பாதுகாப்பை உறுதி செய்கிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.