வணிகம்
விலை குறையும் பஜாஜ் வாகனங்கள்
ஜிஎஸ்டி வரிக் குறைப்பின் முழு பலனை வாடிக்கையாளா்களுக்கு வழங்குவதற்காக தங்களது வாகனங்களின் விலைகளைக் குறைக்கவிருப்பதாக முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரிக் குறைப்பின் முழு பலனை வாடிக்கையாளா்களுக்கு வழங்குவதற்காக தங்களது வாகனங்களின் விலைகளைக் குறைக்கவிருப்பதாக முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ அறிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜிஎஸ்டி வரிக் குறைப்பின் எதிரொலியாக, நிறுவன இரு சக்கர வாகனங்கள் மற்றும் கேடிஎம் மோட்டாா் சைக்கிள்களுக்கு 20,000 ரூபாயும், மூன்று சக்கர வாகனங்களுக்கு 24,000 ரூபாய் வரை விலை குறைக்கப்படும். பண்டிகைக் காலத்திற்கு முன்பாக இந்த ஜிஎஸ்டி சீா்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு முக்கிய மாற்றமாகும்.
வரும் 22-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள விற்பனையகங்களில் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.