புதிய வண்ணங்களில் யமஹா ஆர்15 வரிசை பைக்குகள்!

புதிய வண்ணங்களில் யமஹா ஆர்15 வரிசை பைக்குகள்...
யமஹா ஆர்15
யமஹா ஆர்15 Photo : Yamaha / Website
Published on
Updated on
1 min read

யமஹா நிறுவனம் ஆர்15 வரிசையில் பைக்குகளை புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்துள்ளது.

யமஹா நிறுவனம் ஆர்15 வரிசையில் ஆர்15எம், ஆர்15 வி4 மற்றும் ஆர்15 எஸ் ஆகிய மூன்று மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.

இந்த நிலையில், தற்போது இந்தியாவில் மூன்று மாடல் பைக்குகளையும் புதிய வண்ணங்களில் யமஹா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பைக்குகளில் பிற அம்சங்களில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை.

ஆர்15எம் தற்போது மெட்டாலிக் கிரே நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஆர்15 வி4 மாடல், மெட்டாலிக் பிளாக், ரேசிங் புளூ மற்றும் மேட்டி பியர்ல் ஒயிட் ஆகிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், ஆர்15 எஸ் பைக்கை மேட்டி பிளாக் நிறத்தில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளனர்.

ஆர் 15 வரிசை பைக்குகளில் 155 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் இடம்பெற்றுள்ளது. 10,000 ஆர்பிஎம்-இல் 18 எச்பி திறன், 7,500 ஆர்பிஎம்-இல் 14.2 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் வகையில் என்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது. 6 கியர் பாக்ஸ்கள் உள்ளன.

ஆர்15எஸ் பைக்கின் ஆரம்ப விலை ரூ. 1.67 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆர்15 வி4 ரூ. 1.84 லட்சமாகவும், ஆர்15எம் ரு. 2.01 லட்சமாகவும் உள்ளன.

Summary

Yamaha R15 range of bikes in new colors

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com